உலகளாவிய டெண்டர் ஒருவர் கூட பங்கேற்கவில்லை- வருத்தத்தில் அமைச்சர்!!

தமிழகத்தில் டெண்டரில் நிறுவனங்கள் பங்கேற்காதது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்
 
tender

தற்போது நம் இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகள் நாட்டிலுள்ள பல மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு குறிப்பிட தக்கது .ஆட்சியிலுள்ள திமுக ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசை மட்டும் நம்பாமல் உலகளாவில் தமிழகத்திற்கு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை பொருட்களை கோரியிருந்தனர். இதுகுறித்து தற்போது தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.subramanian

முன்னதாக அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  மசனகுடி பகுதியில் ஆய்வு செய்து அங்கு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை கூறியுள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி கான உலகளாவிய டெண்டர் விவகாரம் பற்றி கூறினார். மேலும் அவர் ஒரிசா கர்நாடகம் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் வெளிநாடுகளில் டெண்டர் மூலம் தடுப்பூசிகள் வாங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். மேலும் நேற்றைய தினத்தில் நம் தமிழகத்தில் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை முடிந்தது என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறினார் அதில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை என்றும் கூறினார். இதற்காக மத்திய அரசை குறை சொல்வது நியாயமில்லை என்றும் அவர் கூறினார். மேலும் டெண்டரில் நிறுவனங்கள் பங்கேற்காதது குறித்து உரிய ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் பேட்டி அளித்தார்.

From around the web