யார் மீதும் வீண் பழி சுமத்த வில்லை அமைச்சர் கடம்பூர் ராஜு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு!
 

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் பல்வேறு கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த வேட்பாளர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

admk

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியிலும், எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில், தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்பு மனுவை அவர்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் அதிமுக சார்பில் கடம்பூர் ராஜு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் கடந்த இரண்டு தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தொகுதியில் அவருக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் மேலும் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நிலையில் கடம்பூர் ராஜு கோவில்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.   தேர்தல் பிரசாரத்தில்  இடையில் அவர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கொண்டார். அப்போது அவர் கூறினார், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் யார் மீதும் பழி சுமத்த வில்லை எனவும் கூறினார். மேலும் வெளிப்படைத்தன்மைக்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது எனவும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

From around the web