விஜய், சசிகலா குறித்து அமைசர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சசிகலா மற்றும் விஜய் குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சசிகலா மற்றும் விஜய் குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எம்ஜிஆரை உருவகப்படுத்தி விஜய்யின் ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து அவரது ரசிகர்களால் மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன், உரிமைகுரல், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன், இதயக்கனி உள்ளிட்ட படங்களில் உள்ள போஸ்டர்களில் எம்ஜிஆருக்கு பதிலாக விஜய்யின் முகம் தென்படுகிறது. இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

இந்த போஸ்டர்கள் குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘எல்லோரும் எம்ஜிஆர் ஜெயலலிதா போல் ஆகி விட முடியாது என்றும் எம்ஜிஆரின் இடத்தை நிரப்பி விடலாம் என்று விஜய் நினைத்தால் அது முடியாத காரியம் என்றும் கூறியுள்ளார் 

அதேபோல சசிகலா குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் ’மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகி விட முடியாது என்றும் சசிகலா வந்தாலும் வரட்டும் எங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் சசிகலா குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறிய இந்த கருத்துக்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன 

From around the web