அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து பின்னடைவில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் என்பதும் அதன்பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதியானது என்பதும், இந்த நிலையில் அவருக்கு எக்மோ மற்றும் செயற்கை சுவாச  கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web