அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை!

 

அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று என்றும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா என்றும், எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் சற்றுமுன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவை முதல்வர் பழனிசாமி நேரில் சென்று பார்த்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் கிடைத்ததை அடுத்து முதல்வரைக்கண்டு துக்கம் விசாரிக்க சென்னையிலிருந்து சேலம் கிளம்பிச் சென்றார் என்பதும் ஆனால் கார் திண்டிவனம் அருகே சென்றபோது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும், அதன்பின் சென்னை தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web