அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: மருத்துவமனையின் அதிர்ச்சி அறிக்கை

 

தமிழக விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லை என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு அதிகபட்ச உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவலைக்கிடமாக இருக்கும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்த விபரங்களை அமைச்சர்கள் நேரில் சென்று மருத்துவமனை நிர்வாகிகளிடம்  விசாரித்து ருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web