"ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு ஜிஎஸ்டி"; கவுன்சில் முடிவில் அதிருப்தியில் அமைச்சர்!

ஜிஎஸ்டி கவுன்சில் முடிவில் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது!
 
gst

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில் தொழில் முடக்கம் அதிகமாக காணப்படுகிறது. காரணம் என்னவெனில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டம் என்பதால் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகளில் தொழில் நிலையங்கள் போன்றவைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதரங்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இந்த தொழிலாளர்களை மேலும் பாதிக்கும் வண்ணமாக ஜிஎஸ்டி என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் மீது அதிக வரி வசூலிக்க பட்டதாகவும் காணப்பட்டன.palanivel

மேலும் இவை சிறு தொழிலாளர்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. இது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கவுன்சிலிங் முடிவில் அமைச்சர் அது அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற ஜிஎஸ்டி கவுன்சில் நினைத்தது தவறு என்றும் கூறியுள்ளார். மேலும் மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் வருவாய், பொருளாதாரம், மக்கள்தொகை, உற்பத்தி  மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வாக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை சொந்த ஆதாரத்தில் தான் செலவு செய்யப்படுகிறது என்றும் அவர் இது குறித்து கூறியுள்ளார். மேலும் மாநிலங்களிலிருந்து பெற்று மத்திய அரசு தரும் நிதி தமிழகத்துக்கு 30% அளவாகவே உள்ளது என்று அவர் கூறியுள்ளார். பெரிய மாநிலங்களில் இருந்து விடுபடும் ஈட்டும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் புகார் கொடுத்துள்ளார்.

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து அமைச்சர் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரி முறை என்பது முழு ஆய்வு இல்லாமல் கொண்டுவரப்பட்டது தான் என்றும் அவர் கூறியுள்ளார் என்றும் ஜிஎஸ்டி வரி முறை ஆதாரமில்லாமல் ஆட்டம் கண்டு தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்களை கொண்டு வந்தால்தான் அது நீடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web