அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு கொரோனாவா? பரிசோதனை முடிவு

தமிழகத்தில் பாமர பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி வருவதும் அதில் சிலர் உயிரிழந்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், வடபழனி விஜயா மருத்துவமனையின் இயக்குனர், மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட ஒருசிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அதுமட்டுமின்றி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
 
அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு கொரோனாவா? பரிசோதனை முடிவு

தமிழகத்தில் பாமர பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி வருவதும் அதில் சிலர் உயிரிழந்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், வடபழனி விஜயா மருத்துவமனையின் இயக்குனர், மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட ஒருசிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அதுமட்டுமின்றி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா நோய் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்த போதிலும் அது அமைச்சர் அன்பழகன் தரப்பில் இருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை இரண்டு முறை செய்யப்பட்டதாகவும், இரண்டிலும் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகி விட்டது

தமிழக எம்எல்ஏக்கள் உள்பட பல பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது

From around the web