சைக்கிள் ரிக்சாவில் இருந்து வாக்கு சேகரித்த அமைச்சர்!

குழந்தைகளை தூக்கி கொஞ்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்!
 
சைக்கிள் ரிக்சாவில் இருந்து வாக்கு சேகரித்த அமைச்சர்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியானது தனது வேட்பாளர் பட்டியலையும், தனது தேர்தல் அறிக்கையும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்தனர்.

admk

மேலும் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் கட்சி தரப்பில் தகவல் வெளியானது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் ராயபுரம் பகுதியில் போட்டியில் உள்ளதாகவும்,  ராயபுரம் பகுதியில் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தற்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று ராயபுரம் பகுதியில் சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் அங்குள்ள குழந்தைகளை தூக்கி கொஞ்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் அமைச்சர். அவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இன்று காலை முதலே சென்னையில் உள்ள எம் சி சாலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பின்னர் அங்குள்ள ரிக்சா வண்டியில் ஏறி  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவருக்கு மாலைகளும் அங்குள்ள மக்கள் அணிவித்தனர்.

From around the web