அமைச்சர் செல்லூர் ராஜு ,அமைச்சர் செங்கோட்டையன் வேட்பு மனுக்கள் ஏற்பு!

அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் திமுக வேட்பாளர் சின்னம்மாள் போட்டியிடும் மதுரை தொகுதியில் வேட்பு மனு ஏற்கப்பட்டது!
 
அமைச்சர் செல்லூர் ராஜு ,அமைச்சர் செங்கோட்டையன் வேட்பு மனுக்கள் ஏற்பு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி யில் உள்ளது. மேலும்தமிழகத்தில் எந்த கூட்டணியின் 234 தொகுதியிலும் தன் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி.   எதிர்கட்சியான திமுக கட்சி  காங்கிரஸ் கட்சி கூட்டணி  சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.இது மத்தியில் நேற்றைய தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தினம் அறிவித்த நிலையில் தமிழகத்தில் பல வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு வருகிறது.

dmk

இந்நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ஆட்சியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. மேலும் அதே தொகுதியில் திமுக வேட்பாளர் சின்னம்மாள் வேட்பு மனு ஏற்கப்பட்டது. மேலும் அதிமுகவின் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.

தொண்டாமுத்தூரில் போட்டியிடும் அமைச்சர் எஸ் பி வேலுமணி வேட்புமனுவில் குளறுபடி உள்ளதாக திமுக தரப்பில் புகார் அளித்தனர்.  மேலும் சொத்து விவரங்கள் சரியாக இல்லை எனவும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி புகார் அளித்துள்ளார்.

From around the web