குழந்தைகளை தூக்கி கொஞ்சும் அமைச்சர் பெஞ்சமின்!

குழந்தைகளை தூக்கி கொஞ்சி வாக்குகளைச் சேகரிக்கும் அமைச்சர் பெஞ்சமின்!
 

சட்டமன்ற தேர்தலில் பல்வேறு ஏற்பாடுகள் பல கட்சிகள் சார்பில் நடைபெற்றது.இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சி அதிமுக கூட்டணியாக பாஜக கட்சியை வைத்துள்ளது. மேலும் இதற்கு போட்டியாக எதிர்க்கட்சியான திமுக காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியாக  சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். மேலும் பல கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

admk

இந்நிலையில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.மேலும் அதிமுக சார்பில் அமைச்சர் பெஞ்சமின் மதுரவாயில் தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதலே  அமைச்சர் பெஞ்சமின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் அவர் சென்னையில் உள்ள நொளம்பூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மேலும் அங்குள்ள குழந்தைகளை தூக்கி மக்கள் கவனத்தை ஈர்த்தார் அமைச்சர். மேலும் அவர் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web