வாக்காளர்களை மிரட்டிய அமைச்சர் பெஞ்சமின்! தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை!

வாக்காளர்களை மிரட்டியதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து பெஞ்சமின் தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று காலையில் தொடங்கியது வாக்குப்பதிவானது மிகவும் விறுவிறுப்பாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று இருக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்காளர்களுக்கு கொடுக்க  சனிடைசர், முக கவசம், கையுறை போன்றவை வழங்கபட்டு வருகிறது. மேலும் வாக்காளர்களின் வெப்பநிலையும் கணக்கிடப்பட்டு வருகிறது.

vote

இதன் மத்தியில் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபலங்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களது தொகுதியில் உட்பட்ட பகுதிக்கு சென்று வாக்குப்பதிவில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையில் தளபதி விஜய் தனது வாக்கினைப் பதிவு செய்தார் மேலும் தல அஜித்தும் தனது வாக்கினை பதிவு செய்தார். அமைச்சர் ஒருவர் வாக்காளர்களை திட்டியதாக புகார்.

 அதன்படி அதிமுக அமைச்சர் பெஞ்சமின் வாக்காளர்களை மிரட்டியதாக புகார் எழுந்தது. அவர் மதுரவாயலில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் எழுந்தது. மேலும் மதுரவாயிலில் உள்ள வாக்குச்சாவடி 92 வது வார்டில் வாக்களிக்க வந்த மக்களை சாதி ரீதியாக பெஞ்சமின் திட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து அமைச்சர் பெஞ்சமின் தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web