புல்லாங்குழல் இசையால் அதிகரித்த பால்

பகவான் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசையையும் பசு பால் கொடுப்பதையும் இணைத்து பேசிய அசாம் மாநிலம் பாஜக எம்.எல்.எ திலிப் குமார் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.எ திலிப் குமார் அவரது தொகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பகவான் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது போல் புல்லாங்குழல் இசைத்தால் அதை கேட்கும் பசுக்கள் வழக்கத்திற்கு அதிகமாக பால் கொடுக்கும் என்று பேசினார். எம்.எல்.எ கூறிய இக்கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படுகிறது. இது எம்.எல்.எ திலிப் குமாரின் கருத்து
 

பகவான் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசையையும் பசு பால் கொடுப்பதையும் இணைத்து பேசிய அசாம் மாநிலம் பாஜக எம்.எல்.எ திலிப் குமார் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்.எல்.எ திலிப் குமார் அவரது தொகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பகவான் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது போல் புல்லாங்குழல் இசைத்தால் அதை கேட்கும் பசுக்கள் வழக்கத்திற்கு அதிகமாக பால் கொடுக்கும் என்று பேசினார். எம்.எல்.எ கூறிய இக்கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படுகிறது.

இது எம்.எல்.எ திலிப் குமாரின் கருத்து மட்டுமின்றி குஜராத் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புல்லாங்குழல் இசையால் அதிகரித்த பால்

இந்து மத கடவுளான பகவான் கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவர். இவரின் இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை, என்ற கூற்று வழக்கத்தில் உள்ளது. கோபாலனின் குழலைக் கேட்டு பசுக்கள் எல்லாம் அதிகமாக பால் கரக்கிறது என்ற பாடலை போல் எம்.எல்.எ திலிப் குமார் கருத்து அமைந்துள்ளது.

பாஜக எம்.எல்.எ திலிப் குமார், அவருடைய கருத்தில் பகவான் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைத்தது பொழுதுபோக்கிற்கு இல்லை என்பதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web