2020 எப்பதான் முடியுமோ? வெள்ளம், விமான விபத்தை அடுத்து நிலநடுக்கம்: அதிர்ச்சி தகவல்

இந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சோகமான ஆண்டாகவே உள்ளது. மனித இனத்திற்கே அழிவை தரும் ஆண்டாக உள்ளதாகவே கருதப்படுகிறது உலகம் முழுவதும் கோடிக்கணக்கானர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகிறது அது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களிலும் கனமழை பெய்து வெள்ளத்தாலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது மேலும் நேற்று துபாயில் இருந்து
 

2020 எப்பதான் முடியுமோ? வெள்ளம், விமான விபத்தை அடுத்து நிலநடுக்கம்: அதிர்ச்சி தகவல்

இந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சோகமான ஆண்டாகவே உள்ளது. மனித இனத்திற்கே அழிவை தரும் ஆண்டாக உள்ளதாகவே கருதப்படுகிறது

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகிறது

அது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களிலும் கனமழை பெய்து வெள்ளத்தாலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

மேலும் நேற்று துபாயில் இருந்து கேரளா வந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர்

இவ்வாறு 2020 ஆம் ஆண்டு அடுத்தடுத்து சோதனையான ஆண்டாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒடிசா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவிற்கு இருந்ததாகவும் ஒரிசா மாநிலத்திலுள்ள பெர்ஹாம்பூர் என்ற பகுதிக்கு 73 கிலோமீட்டருக்கு தென்மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது இருப்பினும் இந்த நிலநடுக்கம் குறித்த சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web