தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது: மதுரை ஐகோர்ட் கண்டனம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற பொதுநல வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நடந்தது. இன்றைய விசாரணையின்போது, தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள், புலம்பெயர்ந்த
 
தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது: மதுரை ஐகோர்ட் கண்டனம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற பொதுநல வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நடந்தது. இன்றைய விசாரணையின்போது, தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது என்று கூறி வருத்தப்பட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தர்வின்படி தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web