ஜனவரி 14க்கு பின் விண்டோஸ் 7 கம்ப்யூட்டர் இயங்குமா? அதிர்ச்சி தகவல்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதனால் விண்டோஸ் 7ஐ தங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு விண்டோஸ்10ஐ அதிகம் பேர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக விண்டோஸ் 7ஐ முடிவுக்கு கொண்டு வர மைக்ரோசாப்ட் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி 14ஆம் தேதிக்கு பின் விண்டோஸ் 7 முடிவுக்கு வந்தாலும் விண்டோஸ் கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து
 
ஜனவரி 14க்கு பின் விண்டோஸ் 7 கம்ப்யூட்டர் இயங்குமா? அதிர்ச்சி தகவல்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதனால் விண்டோஸ் 7ஐ தங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு விண்டோஸ்10ஐ அதிகம் பேர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக விண்டோஸ் 7ஐ முடிவுக்கு கொண்டு வர மைக்ரோசாப்ட் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜனவரி 14ஆம் தேதிக்கு பின் விண்டோஸ் 7 முடிவுக்கு வந்தாலும் விண்டோஸ் கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் ஆனால் அதை நேரத்தில் விண்டோஸ் 7 பயன்படுத்தும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது சரி செய்யப்படாது எனவும் மைக்ரோசாட் தெரிவித்துள்ளது.

மேலும் விண்டோஸ்7 ஒரிஜினல் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே விண்டோஸ்10 மென்பொருளை டவுன்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அதற்காக தனியாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

From around the web