நேரத்தை மாற்றியது மெட்ரோ! முக்கிய தகவல்கள்:ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு

மெட்ரோ ரயில் நேரம் மாற்றப்பட்டதாக சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது!
 
நேரத்தை மாற்றியது மெட்ரோ! முக்கிய தகவல்கள்:ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு

தமிழகத்தில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் தமிழக அரசின் சார்பில் சில நாட்கள் முன்பு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளும் தடைகள் விதிக்கப்பட்டன. மேலும் அந்த கட்டுப்பாட்டு விதிகள் தடைகளும் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தது. மேலும் இறுதி சடங்கு ஊர்வலத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி மறுத்திருந்தது.

metro

மேலும் ஊர்வலங்கள் திருவிழாக்கள்போன்றவற்றிற்கு அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்காக பல்வேறு முன் நடவடிக்கைகள் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கக போக்குவரத்து கழகமும் சில சிறப்பு பேருந்துகள் பற்றிய தகவல்களை வெளியிட்டது. மேலும் சென்னை சேலம் மற்றும் திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களும் போக்குவரத்து பயணிக்கும் நேரத்தையும் வெளியிட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது அதிவேக பயணிக்கும் ரயில் மெட்ரோ ரயிலின் நேரம் மாற்றப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயங்கும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இரவு 11 மணிவரை இயக்கப்பட்ட நிலையில் தற்போது நேரம் மாற்றப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் நிலையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மெட்ரோ நிர்வாகத்தின் சார்பிலும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருவதாக காணப்படுகிறது..

From around the web