வானிலை ஆய்வு மையம்:பலத்த சூறாவளி! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அரபிக் கடலின் தென் கிழக்கு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சூறாவளி வீசக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
வானிலை ஆய்வு மையம்:பலத்த சூறாவளி! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் காலமாக காணப்படுவது இந்த கோடைகாலம். ஏனென்றால் இந்த கோடைகாலம் தொடங்கினால் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகவும் உயர்ந்து மக்களை மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கி விடும். மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு அதிகரித்தும் காணப்படும் மக்கள் அனைவரும் மிகுந்த எரிச்சலில் இருப்பார்கள்.மேலும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வெயில் காலம் தொடங்கியதும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தோடு இந்த கோடை காலத்தை சந்திப்பர்.

fisher

தமிழகத்தில் சில வாரங்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து மக்களுக்கு கோடையின் வெப்பத்தை தணித்தது. சில தினங்களாக தமிழகத்தில் மீண்டும் வெப்பநிலை உயர்ந்துள்ளது கொடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மிகுந்த சோகத்தில் இருந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி அரபிக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் கேரள கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சூறாவளி வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும் இந்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி காற்றில் ஒப்பு ஈரப்பதம் ஆனது 50 முதல் 80 சதவீதம் வரை இருக்கும் என்று கூறியது. மேலும் காலை முதல் பிற்பகல் வரை வெக்கை நீடிக்கும் என்றும் கூறியது மேலும் இரண்டு நாளுக்கு பின் தீவிரத்தால் இயல்புக்கு மாறாக வெப்பநிலை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web