பூக்களின் விலையில் புகுந்து விளையாடும் வியாபாரிகள்!கேட்டால் வரத்து இல்லை என்ற காரணம்!!

காய்கறி விலையோடு சேர்த்து பூக்களின் விலையும் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது!
 
flowers

தற்போது நம் தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தமிழகத்தில் ஊரடங்கு அதை மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் எதற்கும் விதிவிலக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை மக்கள் நேற்று இரவு முதல் இன்று இரவு மட்டும் வரையாக தொடர்ந்து வாங்கிக் கொண்டு உள்ளனர். இதனை பலரும் லாபகரமாக பயன்படுத்துகின்றனர்.koyambedu

நேற்று இரவு முதலே தமிழகத்தில் உள்ள பல மார்க்கெட்டில் காய்கறி விலை  நான்கு மடங்கு அதிகரித்து விற்பனை செய்வதில் மிகுந்த வேதனை அளிக்கிறது.குறிப்பாக தக்காளி வெங்காயம் கேரட் கத்திரிக்காய் போன்றவைகளின் விலையானது விண்ணை எட்டும் அளவிற்கு அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் தமிழக அரசும் காய்கறி விலையை பழைய விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவித்து உள்ளது,  பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி நாளை முகூர்த்த தினம் என்பதாலும் வரத்து குறைவு காரணமாகவும் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி மல்லிகை பூ வானது நேற்றைய தினம் வரை 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சாமந்திப்பூ கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பன்னீரும் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

மேலும் சம்பங்கி பூவும் விலையானது 160 விற்கப்படும் வேதனையில் உள்ளனர் பொதுமக்கள். மேலும் இதுபோன்று வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இவ்வாறு பொது மக்களின் நிலைமையை எண்ணாமல் விலையை தங்கள் இலாபத்திற்கு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web