10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா: நிபுணர்கள் எச்சரிக்கை

 
third wave

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதால் குழந்தைகளை பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையும் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பரவி விட்டது என்றும் மும்பை, நாக்பூர் உள்பட ஒருசில இடங்களில் மூன்றாவது அலை பரவி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் விரைவில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு மூன்றாவது அலை பரவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவ நிபுணர்களின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்

From around the web