தடுப்பூசி விலையை குறைக்க நடவடிக்கை! "சீரம் இந்தியா", "பாரத் பயோடெக்"குடன் ஆலோசனை!

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற தடுப்பூசிகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
 
corona

தற்போது நம் இந்தியாவில் கொரோனாவின் பரவல் மிகவும் குறைந்து வருவது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..  இந்திய அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது அதிகமாக காணப்படுகிறது.  மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் பூர்த்தி செய்யப்படும் நம் இந்தியாவில் உள்ள பல மாநில மக்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதாக காணப்படுகிறது. எனினும் பல தனியார் மருத்துவமனைகளில் இந்த கொரோனா  தடுப்பூசியின்  விலையானது அதிகமாக காணப்படுவது மிகுந்த கஷ்டத்தை கொடுக்கிறது.covid

இந்நிலையில் இதுகுறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி விலையை குறைக்க அரசு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. மேலும் தடுப்பூசி கொள்முதல் கொள்கையை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது எதிரொலியாக தடுப்பூசிகளின் விலையை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் உடன் அரசு மேற்கொள்ளும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசிடம் ஒரு தோஸ் மருந்துக்கு தலா 150 ரூபாய் என்ற கட்டணத்தை வசூலிக்கின்றன. இதனால் திருத்தப்பட்ட கொள்முதல் திட்டத்தின் அடிப்படையில் இது மறுபரிசீலனை செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் மிகவும் பயன் அடைவர் என்றும், அவர்களுக்கு தடுப்பூசி எளிதாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web