சாப்பாடு ரூ.7000, வாட்டர் பாட்டில் ரூ.3000: ஆப்கனில் பகல்கொள்ளை!

 
talibans

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அங்குள்ள விமான நிலையத்தில் சாப்பாடு ரூபாய் 7000 என்றும் தண்ணீர் பாட்டில் ரூபாய் 3000 என்றும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆப்கானிஸ்தான் நாட்டில் 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள மக்கள் அச்சமடைந்து வெளியேறி வருகின்றனர் ஏற்கனவே அந்நாட்டில் இருந்த வெளிநாட்டினர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது உள்நாட்டிர்களும் வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் வெளிநாட்டுக்கு செல்ல காத்திருப்பதால் விமான நிலையத்தில் கடும் உணவு தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் சாப்பாடு ரூபாய் 7000 என்றும் தண்ணீர் பாட்டில் ரூபாய் 3000 என்றும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web