மதிமுக தனி சின்னத்துடன் மட்டுமே போட்டியிடும்: வைகோவின் அறிவிப்பால் பரபரப்பு

 

வரும் சட்டமன்ற தேர்தலில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தொடருமா என்பது சந்தேகம் என்று அரசியல் கட்சிகளின் அறிக்கைகளில் மற்றும் அரசியல் தலைவர்களின் பேட்டியில் இருந்து தெரிய வருகிறது

குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக இருப்பது சந்தேகம் என்றும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக, விசிக இருப்பது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது ஒருவேளை காங்கிரஸ், மதிமுக, விசிக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் அக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றும் அதற்கு கண்டிப்பாக காங்கிரஸ் சம்மதிக்காது என்பதால் கூட்டணியிலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது 

மதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே உதயசூரியன் சின்னத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் சட்டமன்ற தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதிக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது என்பதை குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வைகோ பேட்டியளித்தபோது, ‘தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திமுக கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்பதை அவர் தெளிவாக கூறியிருப்பதால் அவர் தொடர்ந்து திமுக கூட்டணியில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும் ஸ்டாலினை முதல்வராக்குவே என்று சூளுரைத்த வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web