"ஸ்புட்னிக்" நம்ம மாநிலத்தில தயாரிக்கலாமே!! ஆசைப்படும் ஆளுநர்!!!

புதுச்சேரியில் ஸ்புட்னிக் வி தயாரிக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் ஆன தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்!
 
sputnik v

தற்போது நம் நாட்டில் உள்ள பல மருத்துவமனைக்கு இரண்டு விதமான தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் இந்த தடுப்பூசிகள்  கடும் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. இதனால் இந்தியாவானது ரஷ்ய நாட்டில் இருந்து உதவி ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி பெற்றது. இதனால் தற்போது பல மாநிலங்களில் இந்த தடுப்பூசியின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது.tamilisai

ஆனால் தற்போது எங்கு தயாரிப்பது என்று குழப்பம் நிலவுகிறது. இத்தகைய நிலையை தன் வசமாக இழுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆளுநர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் ஆக உள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் தற்போது புதுச்சேரியில் தடுப்பூசி தயாரிக்க முன்வருமாறு துணைநிலை ஆளுநர் வேண்டுகோள் விட்டுள்ளார். மேலும் இந்தியாவில் ஸ்புட்னிக் தயாரிக்கும் ரெட்டீஸ் நிறுவனத்திற்கு தேசிய ஆளுநர் இத்தனை வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்   டி ஆர் டி ஓ கண்டுபிடித்துள்ள சிகிச்சைக்கான 2 டி ஜி மருந்துக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆன தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் ஸ்புட்னிக் நியமிக்கப்பட்டால் நம் தமிழகத்திற்கு மிகவும் சுலபமாக இந்த ஸ்புட்னிக் வி மருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web