மெரீனாவை திறக்க உத்தரவிட நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் 7 மாதங்களாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரயில், பேருந்துகள் ஓடத் தொடங்கிவிட்டன, மால்கள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன, நேற்று முதல் திரையரங்குகளும் திறக்கப்பட்டு விட்டன.

ஆனால் ஏழை எளிய மக்களின் பொழுது போக்கிற்காக இருக்கும் மெரினா கடற்கரை மட்டும் இன்னும் திறக்கவில்லை என்பது சென்னை மக்களின் பெரும் குறையாக இருக்கிறது. மேலும் வண்டலூர் பூங்காவையும் திறக்க தற்போது உத்தரவிடப்பட்டு நிலையில் நவம்பர் இறுதி வரை மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சியின் இன்று இதுகுறித்த வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது 

marina beach

இதனை அடுத்து திரையரங்குகள் கூட திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் என்ன சிரமம்? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட் மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து சென்னை மாநகராட்சி விரைவில் மெரினாவில் பொது மக்களை அனுமதிக்க உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மெரினாவை திறப்பதில் என்ன சிரமம் என்பது தான் பொது மக்களின் கேள்வியாக உள்ளது

From around the web