தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7.5 லட்சம்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் நடுத்தர வர்க்கத்தினரிடைய அதிகமாக உள்ளது. இது குறித்து நாடு முழுதும் உள்ள 226 நிறுவனங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போது இருக்கும் வரம்பான ரூ.2.5 லட்சத்திலிருந்து 7.5 லட்சமாக உயரும் எனக்
 
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7.5 லட்சம்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 

நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் நடுத்தர வர்க்கத்தினரிடைய அதிகமாக உள்ளது. 

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7.5 லட்சம்..


இது குறித்து நாடு முழுதும் உள்ள 226 நிறுவனங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போது இருக்கும் வரம்பான ரூ.2.5 லட்சத்திலிருந்து 7.5 லட்சமாக உயரும் எனக் கூறியுள்ளனர். 

இடைக்கால பட்ஜெட்டில் தனிநபரின் வருமானம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் முழுமையான வரி விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்று கூறப்பட்டது.

ஆனால், வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு மேலும் 2.5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web