இனி மாஸ்டர் கார்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பரபரப்பு!

 
master card

மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு திடீரென இந்திய ரிசர்வ் வங்கி காட்டுபாடு விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தான் வழங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாஸ்டர் கார்டு நிர்வாகம் திடீரென விதிகளை மீறி செயல் பட்டதன் காரணமாக அந்த காடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வாடிக்கையாளர் விபரங்கள் கொண்ட சர்வரை மாஸ்டர் கார்டு நிர்வாகம் இந்தியாவில் வைக்கவில்லை என்பதால் இந்த கட்டுப்பாடு என தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் இனிமேல் புதிதாக மாஸ்டர் கார்டு பெறுபவர்களுக்கு அந்த கட்டுப்பாடு பொருந்தும் என தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே மாஸ்டர் காடுகள் பயன்படுத்துபவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மாஸ்டர் கார்டுகளுக்கு திடீரென இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web