மாஸ்டர் நடிகரின் கொரோனா விழிப்புணர்ச்சி வீடியோ: இணையதளத்தில் வைரல்:

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் சாந்தனு கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது கொரோனா குறித்து நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. சாதாரணமாக ஒரு காய்ச்சல் என்றவுடன் உடனே மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம். நம்மூரில் கொரோனா இருக்கின்றதா? என உடனே டெஸ்ட் செய்து ரிசல்ட் கொடுக்கும் வசதி இல்லை. எனவே கொரோனா வைரஸால்
 
மாஸ்டர் நடிகரின் கொரோனா விழிப்புணர்ச்சி வீடியோ: இணையதளத்தில் வைரல்:

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் சாந்தனு கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது

கொரோனா குறித்து நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. சாதாரணமாக ஒரு காய்ச்சல் என்றவுடன் உடனே மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம். நம்மூரில் கொரோனா இருக்கின்றதா? என உடனே டெஸ்ட் செய்து ரிசல்ட் கொடுக்கும் வசதி இல்லை.

எனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்த அறிகுறி இருந்தால் மட்டும் மருத்துவமனை செல்லவும். கொரோனா இல்லாமல் பயத்தில் மருத்துவமனை சென்று அங்கு கூட்டத்தை கூட்டினால் உண்மையாகவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

மேஉம் உண்மையிலேயே நமக்கு கொரோனா இருந்தால் எப்படி நம்மை நாமே தனிப்பட்ட முறையில் தனிமைப்படுத்திக் கொள்வோமோ, அதேபோல் இப்பவே நம்மை நாம் தனிமைபப்டுத்தி கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு சாந்தனு கூறியுள்ளார்

From around the web