மாஸ் காட்டும் கோயம்புத்தூர்; அனைத்திற்கும் தயார்!என்னென்ன உள்ளது இந்த கோவையில?

கோவை அரசு மருத்துவமனையில் திரவ வடிவில் 13 கிலோ லிட்டர் ஆக்சிஜன் சேமித்து வைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது!
 
மாஸ் காட்டும் கோயம்புத்தூர்; அனைத்திற்கும் தயார்!என்னென்ன உள்ளது இந்த கோவையில?

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பினையும் விட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சென்னை அடுத்து  தொழில் நகரமாக காணப்படுகிறது. கோவை மாநகரம். மேலும் இதை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படும் இந்த கோவை மாநகரில் கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது வேதனை அளிக்கிறது. தற்போது கொரோனாவுக்கு எதிராக அனைத்திலும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

corona

கோவையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3722 பேர். மேலும் கோவையில் அரசு மருத்துவமனைகளில் 662 படுக்கைகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 115 படுகைகள் தயாராக இருப்பதாகவும் அறியப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் திரவ வடிவில் ஆக்சிஜன் 13 கிலோ லிட்டர் சேமித்து வைக்கலாம் என்றும் மருத்துவமனையின் சார்பில் கூறப்படுகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் 433 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கோவையில் 22070 தடுப்பூசிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி போட பட்டதாக கூறப்படுகிறது.இதனால் கோவை மாநகராட்சி  இந்த ஆட்கொல்லி நோயான கொரோனாக்காக போரிடுவதில் மிகவும் தீவிரமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

From around the web