பள்ளிகளுக்கே டிசம்பர்ன்னா, தியேட்டருக்கு எப்போ? ஓடிடிக்கு செல்லும் மாஸ் நடிகர்களின் படங்கள்

மத்திய கல்வித்துறை செயலாளர் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் டிசம்பருக்கு மேலும் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் இந்த கல்வி ஆண்டு முழுமையாக வீணாகி விடும் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கே இந்த நிலை என்றால் பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள் திறப்பது குறித்து
 

மத்திய கல்வித்துறை செயலாளர் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

டிசம்பருக்கு மேலும் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் இந்த கல்வி ஆண்டு முழுமையாக வீணாகி விடும் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது

இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கே இந்த நிலை என்றால் பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள் திறப்பது குறித்து நிலை என்ன ஆகுமோ என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் உள்ளது

கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை எடுத்து முடித்து மாதக்கணக்கில் பெட்டியில் வைத்து இருப்பதால் வட்டி நஷ்டமே லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து டிசம்பர் வரை தியேட்டர் திறக்க வாய்ப்பில்லை என்று வெளிவந்துள்ள தகவலால் மாஸ் நடிகர்களின் படங்கள் கூட தற்போது ஓடிடியில் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web