வருமான வரி சோதனை-திசை திருப்பும் முயற்சி மார்க்சிஸ்ட்!

வருமான வரி சோதனை திசை திருப்பும் முயற்சி என்று கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே பாலகிருஷ்ணன்!
 
வருமான வரி சோதனை-திசை திருப்பும் முயற்சி மார்க்சிஸ்ட்!

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள் கூட்டணி வேட்பாளர்கள் பலரும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  தமிழகத்தில் எதிர்கட்சியான திமுக கட்சியும் தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக  வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

income tax

திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் சில தினங்களாக வருமான வரி சோதனை தமிழக பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திமுக வேட்பாளர் பலரின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இன்று காலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இதற்கு கண்டனம் தெரிவிக்க திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வருமான வரி சோதனை பற்றி கூறியுள்ளது. மேலும் வருமான வரி சோதனையானது திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் மீது களங்கம் கற்பிக்கவே ஐடி ரெய்டு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

From around the web