அமெரிக்கா வரை சென்ற ‘திருமங்கலம்’ பார்முலா: வீடியோ வைரல்!

 


தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பார்முலாவை முதல் முதலில் திருமங்கலம் தொகுதியில் துவக்கி வைத்தது திமுக தான் என்றும் அதனால் தான் அதனை திருமங்கலம் பார்முலா என்று அவ்வப்போது அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 

ஆனால் தற்போது கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆரம்பித்த இந்த பணம் கொடுக்கும் கலாச்சாரம் மெல்ல மெல்ல அகில இந்திய அளவிலும் பரவி வருவது அதிர்ச்சிக்குரிய ஒன்றாக இருக்கிறது 

இந்த நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கும் இந்த பணம் கொடுக்கும் விவகாரம் பரவி விட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வாக்காளர்களுக்கு விண்ணப்பம் கொடுத்து அதை நிரப்பச் சொல்லி அத்துடன் பணம் கொடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருமங்கலத்தில் ஆரம்பித்த பணம் கொடுக்கும் பார்முலா தற்போது அமெரிக்கா வரை சென்றுள்ளது ஜனநாயகத்திற்கே கேள்விக்குறியாக உள்ளது

From around the web