அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று கூறி பல கட்சிகள் புறக்கணிப்பு!

நாம் தமிழர் கட்சி,மதிமுக விசிக போன்ற கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
 
அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று கூறி பல கட்சிகள் புறக்கணிப்பு!

இன்று காலையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை தமிழகமெங்கும் நிலவுதியது .மேலும் காரணம் என்னவெனில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடன் தீவிர ஆலோசனை கூட்டம் நடத்தினார். மேலும் இந்த கூட்டத்தில் அவர் சில தகவல்களை கூறினார் அதன்படி தமிழகத்தில் ஆக்சிசன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழியும் பாஜக சார்பில் முருகனும் மற்றும் இடதுசாரி கட்சிகள் பலவும் கலந்து இருந்தன. ஆயினும் இந்த அனைத்து கட்சி கூட்டணியில் பல கட்சிகள் புறக்கணிக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.vaiko

அதன்படி காலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மையம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் முக்கிய கட்சிகளில் ஒன்று மதிமுக ஆகும். ஆனால் இந்த மதிமுக கட்சிக்கு அழைப்பு தராதது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கு அழைப்பு என்றால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தின் சார்பில் அழைப்பு விடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த முறை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடைபெறும் கூட்டத்திற்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுவதில் எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web