போலீஸ் ஸ்டேஷன் முன் உட்கார்ந்து பிளேடால் அறுத்துக் கொண்ட வாலிபர்: அதிர்ச்சி தகவல்

தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்து போலீஸ் ஸ்டேஷன் முன் உட்கார்ந்து கொண்டு தன்னைத்தானே பிளேடால் அறுத்து கொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் வாசுகி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகள் சில வருடங்களாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை இதனை அடுத்து சசிகுமாரின்
 

தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்து போலீஸ் ஸ்டேஷன் முன் உட்கார்ந்து கொண்டு தன்னைத்தானே பிளேடால் அறுத்து கொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் வாசுகி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகள் சில வருடங்களாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை

இதனை அடுத்து சசிகுமாரின் மனைவி வாசுகி தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சசிகுமார் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வாசுகியிடம் கூறிய போதும் அவர் வரவில்லை என தெரிகிறது இதனால் மது குடித்து போதையுடன் சசிகுமார் நேராக போலீஸ் ஸ்டேஷன் முன் உட்கார்ந்து கொண்டார். தன்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறினார்

ஆனால் போலீசார்கள் போதையில் ஏதோ உளருவதாக கருதி சசிகுமாரை கண்டுகொள்ளவில்லை .இந்த நேரத்தில் ஒரு சில நிமிடங்களில் சசிகுமார் பிளேடை எடுத்து தன்னுடைய உடம்பு முழுவதும் கீறிக்கொண்டார் கை கால் மார்பு கழுத்து ஆகிய பகுதிகளில் கீறிக் கொண்டதால் ரத்தம் சொட்டியது

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவருக்கு அறிவுரை கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து சரத்குமாரின் மனைவி வாசுகிக்கும் போன் மூலம் போலீசார் தகவல் கொடுத்தனர்

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி வாலிபர் ஒருவர் திடீரென போலீஸ் ஸ்டேஷன் முன் உட்கார்ந்து தன்னைத்தானே பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web