வங்கி முன் திடீரென தீக்குளித்த வாலிபர்: அதிர்ச்சி காரணம்

தஞ்சாவூரை அடுத்த வல்லம் என்ற பகுதியில் உள்ள வங்கியின் முன் திடீரென வாலிபர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூரை சேர்ந்த வல்லம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் சொந்த வீடு கட்டுவதற்காக அங்கு உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ஒன்பது லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். தவணைகளை சரியாக செலுத்த முடியவில்லை என்றாலும் அவ்வப்போது வட்டியை மட்டும் அவர் கட்டி வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் அவர் மொத்தம் கட்டிய
 

வங்கி முன் திடீரென தீக்குளித்த வாலிபர்: அதிர்ச்சி காரணம்

தஞ்சாவூரை அடுத்த வல்லம் என்ற பகுதியில் உள்ள வங்கியின் முன் திடீரென வாலிபர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சாவூரை சேர்ந்த வல்லம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் சொந்த வீடு கட்டுவதற்காக அங்கு உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ஒன்பது லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். தவணைகளை சரியாக செலுத்த முடியவில்லை என்றாலும் அவ்வப்போது வட்டியை மட்டும் அவர் கட்டி வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் அவர் மொத்தம் கட்டிய 13 லட்சம் ரூபாயில் 3 லட்சம் மட்டுமே அசல் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் மீதமுள்ள 10 லட்ச ரூபாய் வட்டி கணக்கில் சேர்ந்து உள்ளதை அவர் சமீபத்தில் அறிந்தார்

மேலும் வீடு கட்ட வாங்கிய மொத்த பணத்தையும் உடனடியாக கட்ட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வீடு ஏலத்திற்கு வரும் நிலை ஏற்படும் என்றும் வங்கி தரப்பில் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த், கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் வருமானம் இல்லை என்றும் அதனால் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் வங்கி நிர்வாகிகள் கால அவகாசம் தர முடியாது என்று கூறியதை அடுத்து மனமுடைந்த ஆனந்த், வங்கியின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோலை பிடித்து தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்

இதனை அடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன் அவர் தனது வீட்டை ஏலத்தில் விட்டு விடாமல் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஒப்படைக்குமாறு அவர் கூறியுள்ளது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது வங்கி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் கடனை கேட்டதாகவும், மொத்த பணத்தையும் கேட்டு மிரட்டவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web