23 வயது வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த 4 பேர்: என்ன காரணம்

23 வயது வாலிபர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டெல்லியை சேர்ந்த ஒருவரது விலைமதிப்புள்ள மொபைல் போன் தொலைந்து விட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த 23 வயது வாலிபர் ஒருவர் தான் அந்த போனை திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்தனர் இதனை அடுத்து அந்த வாலிபரை ஒரு மரத்தில் கட்டிவைத்து கம்பிகளாலும் கட்டைகளாலும் இரும்புக்
 

23 வயது வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த 4 பேர்: என்ன காரணம்

23 வயது வாலிபர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியை சேர்ந்த ஒருவரது விலைமதிப்புள்ள மொபைல் போன் தொலைந்து விட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த 23 வயது வாலிபர் ஒருவர் தான் அந்த போனை திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்தனர்

இதனை அடுத்து அந்த வாலிபரை ஒரு மரத்தில் கட்டிவைத்து கம்பிகளாலும் கட்டைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் அடித்துள்ளனர். இதில் அடி தாங்க முடியாமல் அந்த வாலிபர் மரணம் அடைந்தார். இதனை அடுத்து இது குறித்து தகவல் கேள்விப்பட்டு போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

அதன்பின் வாலிபரை அடித்து கொலை செய்த அந்த நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நால்வர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்துள்ளனர். மொபைல் போன் தொலைந்து விட்ட ஆத்திரத்தில் வாலிபர் ஒருவரை அடித்து கொலை செய்த நால்வரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web