சீட்டாட்ட கிளப்பில் போலீஸ் ரெய்டு. தப்பிக்க முயற்சித்து 2வது மாடியில் இருந்து குதித்தவர் பரிதாப பலி

புனேயிலுள்ள சீட்டாட்ட கிளப் ஒன்றில் திடீரென போலீசார் ரெய்டு செய்ய வந்ததை அடுத்து அந்த ரெய்டில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த ஒருவர் பரிதாபமாக பலியானார் புனே நகரில் அடிக்கடி சூதாட்ட கிளப்புகளில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதனையடுத்து நேற்று போலீஸ் குழு ஒன்று அதிரடியாக சூதாட்ட கிளப் ஒன்றில் புகுந்து ரெய்டு செய்தது இந்த நிலையில் சூதாட்டக் கிளப்பில் சூதாடி கொண்டிருந்த 48 வயதான ஜாகிர்கான் என்பவர் போலீசிடம்
 

சீட்டாட்ட கிளப்பில் போலீஸ் ரெய்டு. தப்பிக்க முயற்சித்து 2வது மாடியில் இருந்து குதித்தவர் பரிதாப பலி

புனேயிலுள்ள சீட்டாட்ட கிளப் ஒன்றில் திடீரென போலீசார் ரெய்டு செய்ய வந்ததை அடுத்து அந்த ரெய்டில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த ஒருவர் பரிதாபமாக பலியானார்

புனே நகரில் அடிக்கடி சூதாட்ட கிளப்புகளில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதனையடுத்து நேற்று போலீஸ் குழு ஒன்று அதிரடியாக சூதாட்ட கிளப் ஒன்றில் புகுந்து ரெய்டு செய்தது

இந்த நிலையில் சூதாட்டக் கிளப்பில் சூதாடி கொண்டிருந்த 48 வயதான ஜாகிர்கான் என்பவர் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். இதனையடுத்து அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவருக்கு சிகிச்சை தொடங்கும் முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மரணம் அடைந்த நபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web