100க்கு டயல் செய்து பிரதமருக்கு மிரட்டல் விடுத்தவர் அதிரடி கைது: பரபரப்பு தகவல்

100க்கு டயல் செய்து பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த 33 வயது நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா என்ற பகுதியில் 33 வயது நபர் ஒருவர் 100 டயல் செய்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சுறுசுறுப்பாக செயல்பட போலீசார் அந்த நபரின் போன் நம்பரை வைத்து அவரது முகவரியை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை செய்தனர் விசாரணையின்போது தான் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை
 

100க்கு டயல் செய்து பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த 33 வயது நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா என்ற பகுதியில் 33 வயது நபர் ஒருவர் 100 டயல் செய்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சுறுசுறுப்பாக செயல்பட போலீசார் அந்த நபரின் போன் நம்பரை வைத்து அவரது முகவரியை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை செய்தனர்

விசாரணையின்போது தான் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் முழு போதையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பின்னர் விசாரணைக்கு பின் கைது செய்தனர்

முதல்கட்ட விசாரணையில் அவரது பெயர் ஹர்பஜன்சிங் என்றும் அவரது சொந்த ஊர் நொய்டா என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதற்கு முன் அவர் வேறு யாருக்காவது மிரட்டல் விடுத்தாரா? அவரது மிரட்டலின் பின்னணி என்ன? அவருக்கு பின்னணியின் யார் யார் இருக்கின்றனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

பிரதமருக்கு போதையில் உள்ள ஒரு நபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web