கமல், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது!

 
கமல், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது!

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பழக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. குறிப்பாக மரக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்துள்ளதாகவும் பலமுறை அவரிடமும் அவரது பெற்றோரிடமும் போலீசார் எச்சரிக்கை செய்தும் அவர் இதனை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தது.

மனநிலை சரியில்லாதவர் என்பதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்பட பலருக்கும்  மாகாணத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். புவனேஸ்வரன் என்ற பெயரை கொண்ட இவரிடம் பலமுறை போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

bomb threat

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர்கள் கமல்ஹாசன் சரத்குமார் ஆகியவர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து போலீசார் இருவர் வீட்டிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை செய்தபோது அது வதந்தி என்பது உறுதியாகியது இதனை அடுத்து இது குறித்த விசாரணை செய்தபோது தற்போது மாகாணத்தைச் சேர்ந்த அதே இளைஞர் புவனேஸ்வரன் தான் இந்த மிரட்டலையும் விடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் 
தொடர்ச்சியாக ஒரே நபர் திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதை அடுத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

From around the web