கொரோனாவைவிட கொடுமையானது: அம்பான் புயல் குறித்து மம்தா பானர்ஜி

கொரோனா வைரஸால் ஏற்பட்ட அழிவை விட அம்பான் புயலால் பேரழிவு ஏற்பட்டு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் தோன்றிய அம்பான் புயல் நேற்று மதியம் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்துக்கு இடையே கரையை கடந்தது. இந்த புயல் மேற்குவங்க மாநிலம் வங்கதேசம் ஆகிய இரண்டு பகுதிகளையும் புரட்டி எடுத்தது என்பதும் சூறாவளி காற்றினால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
கொரோனாவைவிட கொடுமையானது: அம்பான் புயல் குறித்து மம்தா பானர்ஜி

கொரோனா வைரஸால் ஏற்பட்ட அழிவை விட அம்பான் புயலால் பேரழிவு ஏற்பட்டு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் தோன்றிய அம்பான் புயல் நேற்று மதியம் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்துக்கு இடையே கரையை கடந்தது. இந்த புயல் மேற்குவங்க மாநிலம் வங்கதேசம் ஆகிய இரண்டு பகுதிகளையும் புரட்டி எடுத்தது என்பதும் சூறாவளி காற்றினால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புயல் குறித்த புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ’கொரோனாவால் ஏற்பட்ட அழிவை விட இந்த அம்பான் புயலால் ஏற்பட்ட பேரழிவு மிகப்பெரியது என்றும் குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா ஆகிய பகுதிகளில் புயலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்

From around the web