ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு, ஆனால் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே: எந்த மாநிலத்தில் தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆறாம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஜூலை 31 பின்னரும் ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு
 

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு, ஆனால் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே: எந்த மாநிலத்தில் தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆறாம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஜூலை 31 பின்னரும் ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே போதும் முடக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

இதனால் வாரம் இரண்டு நாட்கள் தவிர மற்ற நாட்களில் பொதுமுடக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் தினத்தில் ஊரடங்கு இல்லை என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பை அடுத்து இதே போன்ற அறிவிப்பை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது

From around the web