ஆக்சிஜன் விநியோகத்தில் முறைகேடா? சென்னையை தொடர்ந்து நெல்லையிலும்!

திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரி இஸ்ரோ நிலையத்தில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது!
 
ஆக்சிஜன் விநியோகத்தில் முறைகேடா? சென்னையை தொடர்ந்து நெல்லையிலும்!

தற்போது நாடெங்கும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதற்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படலாம். அதனால் அவர்களுக்கு ஆக்சன் தேவை உள்ளது. தற்போது தமிழகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஆக்சிசன் தேவையும் ஆக்சிசன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதே, இதற்காக ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கின்றனர்.oxygen

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் பலர் இந்த ஆக்சிசன் விற்பனையில் கொள்ளையடிப்பது தெரிய வருகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் ஆக்சிசன் விலையானது நான்கு மடங்கு அதிகரித்து அங்குள்ள மக்களை மிகவும் சோதனை உள்ளாக்கியது. அதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வளமிக்க மாவட்டமாக காணப்படுகின்ற திருநெல்வேலி மாவட்டத்திலும் இத்தகைய சம்பவம் நடைபெறுவது மிகுந்த சோதனையும் வேதனையும் அளிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம்  மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிசன் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தனியார் நிறுவனத்தின் மூலம் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் புகாரின் பேரில் ராதாபுரம் வட்டாட்சியர் தனியார் மருத்துவமனைக்கு ஆக்சிசன் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை மறித்து ஆய்வு செய்துள்ளார். மேலும் ஆக்சிசன் பிரித்தெடுக்கப்படும் ஆலையில் ராதாபுரம் வட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தினார் என்றும் கூறுகிறது. இது மக்களுக்கு வேதனை அளிக்கிறது ஏனென்றால் இத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் கூட இவ்வாறு ஊழல் நடப்பது வேதனை அளிக்கிறது.

From around the web