ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மூக்குக்கண்ணாடி: யாருடையது தெரியுமா

பழமையான பொருட்களை ஏலம் விடும் போதும் அந்த பொருட்கள் மிகப் பெரிய விலைக்கு ஏலம் போகும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி ஒன்று 2.55 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னர் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஏல நிறுவனத்திற்கு ஒரு மூக்கு கண்ணாடி பெட்டியில் பார்சலாக வந்தது. இதனை காந்தியை தன்னுடைய மாமாவிடம் கொடுத்ததாக அந்த பார்சலை அனுப்பியவர் தெரிவித்திருந்தார்
 

ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மூக்குக்கண்ணாடி: யாருடையது தெரியுமா

பழமையான பொருட்களை ஏலம் விடும் போதும் அந்த பொருட்கள் மிகப் பெரிய விலைக்கு ஏலம் போகும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி ஒன்று 2.55 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னர் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஏல நிறுவனத்திற்கு ஒரு மூக்கு கண்ணாடி பெட்டியில் பார்சலாக வந்தது. இதனை காந்தியை தன்னுடைய மாமாவிடம் கொடுத்ததாக அந்த பார்சலை அனுப்பியவர் தெரிவித்திருந்தார்

இந்த மூக்கு கண்ணாடி மகாத்மா காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது பயன்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இருந்த கண்ணாடியை ஏலம் விட ஏல நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது

வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த மூக்கு கண்ணாடியை ஏலம் எடுக்க பலர் போட்டி போட்டனர். இதில் இந்திய மதிப்பில் ரூபாய் 2.55 கோடி கொடுத்து தொழிலதிபர் ஒருவர் இந்த மூக்குக்கண்ணாடியை ஏலம் எடுத்துள்ளார் அவருடைய விவரங்களை தெரிவிக்க முடியாது என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது

தன்னுடைய மகளுடன் வந்து அந்த தொழிலதிபர் மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடியை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் ஒரே ஒரு மூக்குக்கண்ணாடி ரூபாய் 2.55 கோடிக்கு ஏலம் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web