மாயமான சுயேட்சை வேட்பாளர் காயங்களுடன் ஆற்றங்கரையில் மீட்பு!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பிரசாந்த் பொம்மடி காயங்களுடன் மீட்பு!
 

சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. அதற்காக  தேர்தல் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளிலும் தேர்தல்வேலைப்பாடுகள்  மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் அதிகாரிகள் தங்களது பணிகளை சிறப்பாக  செய்கின்றனர்.

yanam

புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர்  உரிய ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தும் வருகின்றனர். புதுச்சேரியில் ஏனாம் என்ற தொகுதி உள்ளது. இந்த  தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பிரசாந்த் பொம்மடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவர் ஏப்ரல் 1ஆம் தேதி காணாமல் போயிருந்தார். தற்போது அவர் கண்டுபிடிப்பு பட்டார்.

அவர் கோதாவரி ஆற்று பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டார். மேலும் அவர் மயங்கி நிலையில் உள்ளார்.  காயங்களுடன் மீட்கப்பட்ட வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மடிக்கு ஏனாம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுயேச்சை வேட்பாளரை யாராவது கடத்தி சென்று தாக்கினார்கள என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுயேச்சை வேட்பாளர் காயங்களுடன் தாக்கப்பட்டது அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web