முழு ஊரடங்கு எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட மதுரை ஆட்சியர் உத்தரவு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் ஜுன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நான்கு மாவட்டங்களை அடுத்து மதுரையிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது இதனை அடுத்து மதுரைக்குச் செல்லும் விமானங்களும் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்
 

முழு ஊரடங்கு எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட மதுரை ஆட்சியர் உத்தரவு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் ஜுன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நான்கு மாவட்டங்களை அடுத்து மதுரையிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது

இதனை அடுத்து மதுரைக்குச் செல்லும் விமானங்களும் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரையில் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் மதுரையில் 30ஆம் தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்று மதுரை கலெக்டர் வினய் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி முழு ஊரடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியர் வினய் அவர்கள் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இன்று மாலையுடன் மதுரையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் கொரோனா பரவுவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் மேலும் சில மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web