மீண்டும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மொத்தம் எத்தனை பேர்?

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான எம்.பி., எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு செய்தியின்படி மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அந்த எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. ஆம், சற்றுமுன் வெளியான தகவலின்படி மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே இன்று காலை குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர்
 

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான எம்.பி., எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு செய்தியின்படி மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அந்த எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

ஆம், சற்றுமுன் வெளியான தகவலின்படி மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே இன்று காலை குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகிய செய்தியை பார்த்தோம்.

அதேபோல் நேற்று சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் அவர்களுக்கும், திருச்சி மணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு தினமும் குறைந்தபட்சம் இரண்டு எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web