பாஜகவில் இணைந்தார் மதுரை சலூன் கடைக்காரர்: என்ன நடந்தது?

ஊரடங்கு நேரத்தில் தனது மகளின் கல்லூரி மேற்படிப்பிற்காக வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்கு செலவு செய்த மதுரை சலூன் கடைக்காரர் ஒருவரை பிரதமர் மோடி பாராட்டினார் என்பது தெரிந்ததே
 

ஊரடங்கு நேரத்தில் தனது மகளின் கல்லூரி மேற்படிப்பிற்காக வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்கு செலவு செய்த மதுரை சலூன் கடைக்காரர் ஒருவரை பிரதமர் மோடி பாராட்டினார் என்பது தெரிந்ததே மேலும் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரரின் மகன் நல்லெண்ணத் தூதராகவும் ஐநா அமைப்பால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து மதுரை சலூன் கடைக்காரர் மோகன் பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் கசிந்தது ஆனால் மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தான் எந்த கட்சியில் இணையவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடி மீது தனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு என்றும் அவர் தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையைச் சேர்ந்த மாணவியின் தந்தை மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாஜகவில் இணைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாஜகவில் சேர மாட்டேன் என்று கூறிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன், திடீரென குடும்பத்துடன் பாஜகவில் சேர்ந்தது எப்படி? இடையில் என்ன நடந்தது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web