எங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கடலில் சிக்கிய தமிழர் வேண்டுகோள்

ஜப்பான் கடலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் இருக்கும் தமிழர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் தங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதும் அந்த கப்பலை எந்த நாட்டின் துறைமுகமும் அனுமதிக்கவில்லை இதனால் 3700 பயணிகளுடன் அந்த கப்பல்
 
எங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கடலில் சிக்கிய தமிழர் வேண்டுகோள்

ஜப்பான் கடலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் இருக்கும் தமிழர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் தங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதும் அந்த கப்பலை எந்த நாட்டின் துறைமுகமும் அனுமதிக்கவில்லை

இதனால் 3700 பயணிகளுடன் அந்த கப்பல் தற்போது நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலர் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த அன்பழகன் என்பவர் அந்த கப்பலில் பயணம் செய்துள்ள நிலையில் அவரது சமூக வலைதளம் மூலம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தனை மோடி எப்படி மீட்டாரோ அதேபோல் எங்களையும் காப்பாற்ற வேண்டும், எங்களை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், ரஜினி, கமல், அஜீத், விஜய் எல்லோரும் குரல் கொடுத்து அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

From around the web