புரோட்டா வாங்கினால் மாஸ்க் இலவசம்: அசத்தும் மதுரை ஹோட்டல் அதிபர்

புரோட்டா, சிக்கன், பிரியாணி வாங்கினால் மாஸ்க்குகள் மற்றும் கிருமி நாசினிகள் இலவசம் என மதுரை ஹோட்டல் அதிபர் ஒருவர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மதுரையை சேர்ந்த நவநீதன் என்பவர் ஆரப்பாளையம் கிராஸ் உள்பட பல இடங்களில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த பல வருடங்களாக மதுரையில் ஓட்டல் நடத்தி வரும் இவர், மதுரையில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருவதை அடுத்து தனது ஓட்டலில் பிரியாணி, புரோட்டா, கிரில் சிக்கன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசங்களையும்
 

புரோட்டா வாங்கினால் மாஸ்க் இலவசம்: அசத்தும் மதுரை ஹோட்டல் அதிபர்

புரோட்டா, சிக்கன், பிரியாணி வாங்கினால் மாஸ்க்குகள் மற்றும் கிருமி நாசினிகள் இலவசம் என மதுரை ஹோட்டல் அதிபர் ஒருவர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரையை சேர்ந்த நவநீதன் என்பவர் ஆரப்பாளையம் கிராஸ் உள்பட பல இடங்களில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த பல வருடங்களாக மதுரையில் ஓட்டல் நடத்தி வரும் இவர், மதுரையில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருவதை அடுத்து தனது ஓட்டலில் பிரியாணி, புரோட்டா, கிரில் சிக்கன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசங்களையும் கிருமி நாசினிகளையும் இலவசமாக வழங்கிவருகிறார். இதற்காக ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து முகக்கவசங்களையும் கிருமிநாசினிகளையும் இவர் வாங்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தங்களது ஓட்டலுக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலையை சோதனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதுரை மக்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற ஹோட்டல் அதிபர் நவநீதம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

From around the web