மதுரை மக்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி- சித்திரை திருவிழா ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தினத்துக்கொரு விசேசம் இருக்கும். அதிலும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் அதையொட்டிய தேரோட்டமும், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் மிக பிரசித்தம். சித்திரைதிருவிழாவில் கலந்துக்கொள்ள உலகின் பல இடத்திலிருந்து மதுரைக்கு பக்தர்கள் வருகை தருவர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக
 
மதுரை மக்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி-  சித்திரை திருவிழா ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தினத்துக்கொரு விசேசம் இருக்கும். அதிலும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் அதையொட்டிய தேரோட்டமும், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் மிக பிரசித்தம். சித்திரைதிருவிழாவில் கலந்துக்கொள்ள உலகின் பல இடத்திலிருந்து மதுரைக்கு பக்தர்கள் வருகை தருவர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக கோயில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுரையின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே ஐயம் ஏற்பட்டது.

இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டபிஷேகம், திக்குவிஜயம், திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் தடையின்றி நடைபெறும் எனவும் அதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், மே 4ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாண உற்சவம் நடைப்பெறும். திருக்கல்யாண வைபவத்தினை காணமுடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடையக்கூடாது என யோசித்த நிர்வாகம் திருக்கல்யாண வைபவத்தினை இணையம் வழியாக ஒளிப்பரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

From around the web